கண்ணிரண்டு போதாது கற்பகமே என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே கண்ணிரண்டு போதாது கற்பகமே என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே உன்னை பாடும் பதம் நாடி வர பாதார விந்தம் தந்தாயே தாயே கண்ணிரண்டு போதாது கற்பகமே என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே ♪ உயிரில் கலந்தவளே உணர்வில் புகுந்தவளே மயிலாப்பூர் மடமயிலே ஓர் இரவும் பகலுமற்ற வெளியைக் காட்டி என்னை அருகே வா என்றவளே பொட்டு வைத்து முத்தமிட்டுப் போடா என்றாய் பயிர் நட்டுவைத்தேன் எட்டுத் திக்கும் நான் தான் என்றாய் பொட்டு வைத்து முத்தமிட்டுப் போடா என்றாய் பயிர் நட்டுவைத்தேன் எட்டுத் திக்கும் நான் தான் என்றாய் இனி என்ன வந்து என்னை என்ன தான் செய்யும் அம்மா தாயே கண்ணிரண்டு போதாது கற்பகமே என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே ♪ எண்ணம் அறிந்தவளே எல்லாம் தெரிந்தவளே வண்ணம் கொஞ்சும் அன்னக்கிளியே பால் கிண்ணம் எடுத்து வந்து உண்ணக் கொடுத்தவளே மின்னல் மழை ஆனவளே முத்து நகை கொட்டிவிட்டு முன்னே நின்றாய் ரத்தினங்கள் அள்ளிக்கொள்ளு வாடா என்றாய் முத்து நகை கொட்டிவிட்டு முன்னே நின்றாய் ரத்தினங்கள் அள்ளிக்கொள்ளு வாடா என்றாய் உன் உறவில் பிறவி அது பறந்தோடிப் போச்சுதம்மா தாயே தாயே கண்ணிரண்டு போதாது கற்பகமே என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே உனைப் பாடும் பதம் நாடி வர பாதார விந்தம் தந்தாயே தாயே கண்ணிரண்டு போதாது கற்பகமே என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே