அகிலம் நீ, முகிலும் நீ, சிகரம் நீ அழுதிடும் அகதிகள் சிரிப்பு நீ ♪ நிஜமும் நீ, நிழலும் நீ, ஒளியும் நீ துளிர் விடும் உரிமைகள் புரட்சி நீ ♪ வறுமை நிலத்தில் வளரும் விதையே விளையும் விருட்சம் உனக்குள் இனியே தடுக்கும் அசுர அலைகள் நூறே தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே பாரிலே நாளைய சரிதம் நீ பாரிலே நாளைய சரிதம் நீ ♪ ஆயிரம் படைகளும் முரசு தான் முழங்கியே வரட்டுமே ஒருவனாய் வெல்லடா உனக்கு நீ ஆயுதம் உலகிலே (தந்தானே-தானே-தான-தந்தானோ) (தானே-நானே-நோ) (ஹேய்-தந்தானே-தானே-தான-தந்தானோ) (தானே-நானே-நோ) (தந்தானே-தானே-தான-தந்தானோ) (தானே-நானே-நோ) (ஹேய்-தந்தானே-தானே-தான-தந்தானோ) (தானே-நானே-நோ)