கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி
செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்தே தங்குமடி
♪
சீரா சீரா மாமன் சீரா
சேரும் மாடு உன்ன நம்பி வாழ வந்தா
தேரா தேரா ஊஞ்சல் தேரா
நீயும் ஆட பொட்ட புள்ள ஆள வந்தா
சொத்து சொகம் நீயாக
சொந்த பந்தம் நூறாக
சித்தம் அது உன் மூஞ்ச
பாக்க பாக்க ஏலேலோ
கட்டாந்தரை காத்தோட
கும்மாளம் தான் நீ போட
சத்தம் போடும் உன் மடிய
கேக்க கேக்க தாலேலோ
கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி
செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்தே தங்குமடி
காயாதே காடே காஞ்சாலும்
கள்ள காடன் காய மாட்டானே
நாடாண்ட ராசன் சாஞ்சாலும்
நெட்ட வாலன் வாழ்வ காப்பானே
வெள்ளி நெற காங்கேயன்
வீட்டுக்குள்ள வாறாக
ஆரத்தியும் எடுத்திடடி
பொன்னான தாய்பாசம் கைமாறி போகையிலும்
தாயாக உன் மாடு செல்லமும் கொஞ்சுமடி
துள்ளிவரும் சேயாக கையில் நீ ஏந்த
நெனச்சதெல்லாம் பலிக்குமடி
ஏய் வெள்ளையா...
டேய் கருப்பா...
காமி காமி எது காவல் காமி
காள மாடே கர ஏத்தும் சாமி
ஓடி ஓடி உழைச்சோமே ஓடி
மாடில்லாட்டி சுழலாதே பூமி
நெதம் வணங்கும் பரமசிவன் வெளியில வருவதில்ல
குலம் விளங்க வருமிதுபோல் உலகில கடவுள் இல்ல
தடி எடுத்து அத அடிச்சா வலிக்குது மனசுக்குள்ள
வரம் பலவே அது கொடுக்க வணங்கிடு கவலையில்ல
கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி
செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்தே தங்குமடி ம்ம்...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri