Kishore Kumar Hits

Swarnalatha - Muthamizhe Muthamizhea (From "Raman Abdullah") şarkı sözleri

Sanatçı: Swarnalatha

albüm: Hits of Chithra and Swarnalatha


முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
காதல் வழிச் சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை
நாணக் குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை
தாகம் வந்து பாய் விரிக்க
தாவணிப்பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரை சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
கனவு வந்து காத்திருக்கு
தூங்கிகொள்ள மடி இருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்கா
பூவைக் கிள்ளும் பாவனையில்
சூடிகொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்திச் சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா...
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகரே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar