Kishore Kumar Hits

Devan Ekambaram - Moongil Kaadugalae (From "Samurai") şarkı sözleri

Sanatçı: Devan Ekambaram

albüm: Hits of Tippu and Devan


மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
இயற்கை தாயின் மடியில் பிறந்து
இப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே

சேற்று தண்ணீரில்
மலரும் சிவப்பு தாமரையில்
சேறும் மணப்பதில்லை பூவின்
ஜீவன் மணக்கிறது
வேரை அறுத்தாலும்
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள்
ஆனந்த பூசொறியும்
தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல் எங்கே காணேனோ
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில்
உய்யேனோ ஓ ஓ
வெயிலோ முயலோ
பருகும் வண்ணம் வெள்ளை
பனி துளி ஆவேனோ
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
ஓஹோ தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே

உப்பு கடலோடு மேகம்
உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம்
ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும்
சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை நீட்டித்து கொள்கிறதே
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள்
காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆளேனோ
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழை துளி ஆவேனோ
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
இயற்கை தாயின் மடியில் பிறந்து
இப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து
திரிந்து பறந்து பறந்து

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar