Kishore Kumar Hits

Devan Ekambaram - Aaraadha şarkı sözleri

Sanatçı: Devan Ekambaram

albüm: Brindavan


ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா
என் வார்த்தையை அன்பின் சிறையில் நான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே உடையும் ஆசையின் வெள்ளமே
நாட்கள் போனதே காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன் தினம் தினம் மருகினேன்
இது ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா

நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில் உனை வைத்து ஏங்கினேனே
தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும் தாகத்தில் நின்றேன்
குளிர் நீருடன் வந்தேன் இதழால் நிரப்பிட நின்றேன்
ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா
ம்-ம்-நனா-நானா-நானா
ஊ-ஊ-உ-ஆ-ஆ-ஆ

பேசும் பொழுதே சில வார்த்தை தடுமாறும்
தென்றல் நடுவே (தலைநீட்டி பேச பார்க்கும்)
பார்க்கும் பொழுதே இரு கண்கள் கவிபாடும்
நாணம் அதிலே (இடை வந்து போகுமே)
அனுபவம் இல்லை அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பு ஒரு தொல்லை எதிலும் அடங்குவதில்லை
ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா
என் வார்த்தையை அன்பே சிறையில் நான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே உடையும் ஆசையின் வெள்ளமே
நாட்கள் போனதே காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன் தினம் தினம் மருகினேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar