வா... வா... வா... வா... வா வா வா வா வா... வா... வா வா வா வா கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சானைப் போல் பாடப் போறேன்டா கண்ணாடிக் கோப்பையில கண்ணை மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடிப் போகும் காச்சலடி போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷீயலிசம் தான் (கண்ணதாசன்...) பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க இல்லா இடம் இந்த இடம் தானே இந்த இடம் இல்லையின்னா சாமிமடம் தானே மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே சித்தாளு பொண்ணை நெனைச்சு இடிக்கிறாரே இயக்குநர் யாரு. அங்க பாரு. பொலம்புறாரு நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே (கண்ணதாசன்...) அண்ணனோ தம்பியோ எல்லாரும் இங்கே வந்தா டப்பாங்குத்து தானே ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல எங்களுக்கு ஜாதி மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார மச்சி. என்ன ஆச்சி. வேட்டி அவுந்து போச்சு. ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு சேட்டுக் கடையில மனைவியின் தாலியப் பாரு (கண்ணதாசன்...)