இது போர்களமா இல்லை தீ குளமா விதி மாற்றிடும் காதல் புரியாதே இது போர்களமா இல்லை தீ குளமா விதி மாற்றிடும் காதல் புரியாதே தீயின் மனமும் நீரின் குணமும் தெளித்து செய்தவள் நீ நீயா தெரிந்த பக்கம் தேவதையாக தெரியா பக்கம் பேய் பேயா நேரம் தின்றாய் நினைவை தின்றாய் என்னை தின்றாய் பிழை இல்லயா வேலை வெட்டி இல்லா பெண்ணே வீட்டில் உனக்கு உணவில்லையா இரு விழி உரசிட ரகசியம் பேசிட இடி மழை மின்னல் ஆரம்பம் பாதம் கேசம் நாபிக்கமலம் பற்றி கொண்டதும் பேரின்பம் தகதகவென எரிவது தீயா சுடசுடவென தொடுவது நீயா தொடு தொடு வென சொல்லுகின்றாயா கொடு கொடு வென கொல்லுகின்றாயா நண்பர் கூட்டம் எதிரே வந்தால் தனியாய் விலகி நடக்கின்றேன் நாளை உன்னை காண்பேன் என்றே நீண்ட இரவை பொறுக்கின்றேன் இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட இன்னும் என்ன செய்வாயோ செப்படி வித்தை செய்யும் பெண்ணே சீக்கிரம் என்னை கொல்வாயோ எந்த கயிறு உந்தன் நினைவை இறுக்கி பிடித்து கட்டுமடி என்னை எரித்தால் எலும்பு கூடும் உன் பேர் சொல்லி அடங்குமடி பட பட வென படர்வதும் நீயா விடு விடு வென உதிர்வதும் நீயா தட தட வென அதிர வைப்பாயா தனிமையிலே சிதற வைப்பாயா இது போர்களமா இல்லை தீ குளமா விதி மாற்றிடும் காதல் புரியாதே