Kishore Kumar Hits

Harish Raghavendra - Edhu Enna (From "Sivakasi") şarkı sözleri

Sanatçı: Harish Raghavendra

albüm: Hits of Harish Ragavendra & Madhubalakrishnan


இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்

பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா
நீ எந்தன் உயிருக்குள் பாதியா
நானென்ன சிவனோட ஜாதியா
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ
சுவாசத்தில் உன் வாசம் தானோ
இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை
இளமை இளமை இணைத்தால் புதுமை
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா

கண்ணுக்குள் கண்ணை வைத்து பாரம்மா
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா
பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா
நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ
வானத்தை மூட வருவாயோ
இளமை கதவை பருவம் திறக்கும்
முதல் நாள் இரவை மறுநாள் அழைக்கும்
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar