Kishore Kumar Hits

Minmini - Engum Pugazh şarkı sözleri

Sanatçı: Minmini

albüm: Amen Alleluya


எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்
உயர்வீரரெனப் பக்தர் ஓதுகிறார்
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன் பட்டவர் கண்திறக்கவே!
கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன் பட்டவர் கண்திறக்கவே!
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்!
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே!
சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே!
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்!
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar