ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி நாடி வரும் இதயம் எல்லாம் நலம் புரியும் சக்தி ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி நாடி வரும் இதயம் எல்லாம் நலம் புரியும் சக்தி கோடான கோடி உயிர் ஈன்றவள் நீயே சக்தி ஏதேனும் துன்பமெனில் ஓடி வருவாயே முந்தி கலி காலம் என்றே நீ அவதாரம் கொண்டாய் அம்மா கலங்காதே மகனே என தாரணி மீதொரு காவல் கொண்டாயே ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி நாடி வரும் இதயம் எல்லாம் நலம் புரியும் சக்தி ♪ கோடி யுகங்களை ஓடி கடந்தபின் இங்கு வந்து அவதரித்தாய் ஆலகண்டனும் தேடி பணிந்திடும் ஆதிசக்தி வடிவெடுத்தாய் தீயின் நிறமென தீமை கெடுமென மண் பிளந்து உருவெடுத்தாய் சூலம் பிடித்தொரு சூழும் பகையினை சுட்டெறிக்க பிறப்பெடுத்தாய் (மனிதன் என்பவன் மாறி போனான்) (அதனால் வந்தாய் அம்மா) (மருவத்தூரில் பீடம் கொண்டு மக்களை காத்தாய் அம்மா) (பாவம் என்பது பெருகி போனது அதனால் வந்தாய் அம்மா) (பாலன் ஒருவன் மேலே வந்து பாரை காத்தாய் அம்மா) ஆடிப்பூரம் கண்டவர் நெஞ்சில் அச்சம் துளியும் இல்லை அம்மா சரணம் என்றே சொன்னால் காலன் வருவது இல்லை உன்னை போலே பேசும் தெய்வம் இல்லை, இது உண்மை ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி நாடி வரும் இதயம் எல்லாம் நலம் புரியும் சக்தி ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி நாடி வரும் இதயம் எல்லாம் நலம் புரியும் சக்தி ♪ ஓதும் ஒரு துளி நாமம் எழுந்தபின் ஓடி உடன் வருகின்றாய் ஏது குறை என கூறு மகன் என சொல்லி அருள் தருகின்றாய் தேவ அமுதென ஏழை கொடுத்திடும் கஞ்சி அதை சுவைக்கின்றாய் வாடும் அவரிடம் வாழும் வழிகளை அம்மா நீ கொடுக்கின்றாய் (ஜாதி நிற பேதம் இல்லை உன்னிடத்தில் அம்மா) (ஏழை பணக்காரன் இல்லை உன் மனதில் அம்மா) (பெண் குலத்தை போற்ற வந்த மாதரசி அம்மா) (எங்களுக்கு என்றும் நீயே காவல் தானே அம்மா) அம்மா உந்தன் வாசல் மேலே பசியும் இல்லை தாயே அன்னதானம் ஆடை தானம் என்றும் தருவாயே வானோர் தம்மை மருவூர் வரவழைத்தாயே, அடி மாயே ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி நாடி வரும் இதயம் எல்லாம் நலம் புரியும் சக்தி ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி நாடி வரும் இதயம் எல்லாம் நலம் புரியும் சக்தி கோடான கோடி உயிர் ஈன்றவள் நீயே சக்தி ஏதேனும் துன்பமெனில் ஓடி வருவாயே முந்தி கலி காலம் என்றே நீ அவதாரம் கொண்டாய் அம்மா கலங்காதே மகனே என தாரணி மீதொரு காவல் கொண்டாயே ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி நாடி வரும் இதயம் எல்லாம் நலம் புரியும் சக்தி (ஆடிப்பூரம் பூத்தவளே, ஆதியில் வந்த மூத்தவளே) (மருவூர் நின்ற மாயவளே, எமை காக்கும் தெய்வம் நீயே) (ஆடிப்பூரம் பூத்தவளே, ஆதியில் வந்த மூத்தவளே) (மருவூர் நின்ற மாயவளே, எமை காக்கும் தெய்வம் நீயே) (ஆடிப்பூரம் பூத்தவளே, ஆதியில் வந்த மூத்தவளே) (மருவூர் நின்ற மாயவளே, எமை காக்கும் தெய்வம் நீயே) (ஆடிப்பூரம் பூத்தவளே, ஆதியில் வந்த மூத்தவளே)