தேவனே நீ நினைத்தால் போதுமே தீயிலே தென்றலும் தோன்றுமே தேவனே தேவனே நீ நினைத்தால் போதுமே தீயிலே தென்றலும் தோன்றுமே தேவனே ♪ ஜோடி கிளிகள் கூடி மகிழ்தல் நீதி இல்லை என்று சொன்னால் ஜோடி கிளிகள் கூடி மகிழ்தல் நீதி இல்லை என்று சொன்னால் சோலை எதற்கோ சொந்தம் எதற்கோ சொல்வீரே எங்கள் ஏசுவே கீதம் என்பதும் காதல் என்பதும் ஜாதி பேதம் பார்க்குமோ ஜாதி பேதம் பார்க்குமோ தேவனே நீ நினைத்தால் போதுமே தீயிலே தென்றலும் தோன்றுமே தேவனே ♪ ஓலை குடிசை ஏழை என்றால் ஒளியை வீசும் சூரியன் ஓலை குடிசை ஏழை என்றால் ஒளியை வீசும் சூரியன் ஒதுங்கி போக சொல்லுமோ உலக நீதி ஆகுமோ வான மழையும் ஜீவ நதியும் யார்க்கும் பொதுவே கர்த்தரே யார்க்கும் பொதுவே கர்த்தரே தேவனே நீ நினைத்தால் போதுமே தீயிலே தென்றலும் தோன்றுமே தேவனே