மாட்டுவண்டி சாலையிலே கூட்டுவண்டி போகுதம்மா
கூட்டுவண்டி உள்ளுக்குள்ளே கூண்டுக்கிளி வாடுதம்மா
கூறப்பட்ட இடம்வேறு இவள் போகும் இடம்வேறு
காதலுக்கு வரலாறு கண்ணீரு தகராறு
மாட்டுவண்டி சாலையிலே கூட்டுவண்டி போகுதம்மா
♪
ஓடிப்போய் சொல்லிவிட உயிர்கிடந்து துடிக்கிறது
ஊமைகண்ட கனவு இது உள்ளுக்குள் வலிக்கிறது
எண்ணத்தைச் சொல்லாமல் ரெண்டுமனம் தவிக்கிது
கன்னத்தில் சிந்தாமல் கண்ணீரும் உறைந்தது
காட்டு மரங்களெல்லாம் கைநீட்டி அழைக்குது
மாட்டுச் சலங்கையெல்லாம் மகளொடு அழுகுது
மாட்டுவண்டி சாலையிலே கூட்டுவண்டி போகுதம்மா
♪
ஆற்றுமணல் மேடுகளே அதனருகே ஆலயமே
தென்னையிளம் தோப்புகளே தேன்கொடுத்த சோலைகளே
நதிவழி போனமகள் விதிவழி போகின்றாள்
இதயத்தில் துடிப்பில்லை இருந்தாலும் வாழுகின்றாள்
சின்னக் கிளியிரண்டும் செய்துவிட்ட பாவமென்ன
அன்பைக் கொன்றுவிட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன
மாட்டுவண்டி சாலையிலே கூட்டுவண்டி போகுதம்மா
கூட்டுவண்டி உள்ளுக்குள்ளே கூண்டுக்கிளி வாடுதம்மா
கூறப்பட்ட இடம்வேறு இவள் போகும் இடம்வேறு
காதலுக்கு வரலாறு கண்ணீரு தகராறு
மாட்டுவண்டி சாலையிலே கூட்டுவண்டி போகுதம்மா
கூட்டுவண்டி போகுதம்மா
கூட்டுவண்டி போகுதம்மா
கூட்டுவண்டி போகுதம்மா
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri