ஏனோ என் பாடல் உன் இசை தேடுதே சொல்லாமல் கொள்ளாமல் உனைப் பாடுதே இசையானவள், இனிதானவள் இளம் காற்று போல் வீசும் இதமானவள் என் சுவாசம் உன் வாசம் தான் ஏனோ என் பாடல் உன் இசை தேடுதே சொல்லாமல் கொள்ளாமல் உனைப் பாடுதே ♪ கையோடு கை கோர்த்து நடமாடவா? கண்ணோடு கண் பார்த்து கதை பேசவா? மொழியாக நீ இசையாக நான் ஒளியாக நீ பகலாக நான் நீயில்லா நான் ஏதம்மா? ஏனோ என் பாடல் உன் இசை தேடுதே சொல்லாமல் கொள்ளாமல் உனைப் பாடுதே ♪ பெண்ணாக நான் எனை உணர்ந்தேனடா உன்னோடு மெதுவாக உறைந்தேனடா தொலைதூரமும், குறல் கேட்டதோ தொடும் தூரம் போல் உயிர் பூத்ததோ முகில் வானில் சிறகாகிறேன் உன்னால் உன் கண்ணால் என் மனம் பூக்குதே கண்ணால் என் நெஞ்சம் உன் வசமாகுதே இது என்னவோ புது மாயங்கள் இமையோரமாய் கனவோடைகள் உயிரெல்லாம் உன் பாடல்கள் உன்னால் உன் கண்ணால் என் மனம் பூக்குதே கண்ணால் என் நெஞ்சம் உன் வசமாகுதே