Kishore Kumar Hits

Rajinikanth - Oru Jeevanthan - Happy şarkı sözleri

Sanatçı: Rajinikanth

albüm: Naan Adimai Illai


ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ ஹோ ஓ ஓ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசை தான் நல்ல மணிமந்திரம்
நான் தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா ஹஹஹா நடுராத்திரி
ஸ்ருதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar