Kishore Kumar Hits

Jeeva - Vaazhkai Enbathu şarkı sözleri

Sanatçı: Jeeva

albüm: Tamil M.A.


வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி
வலிக்க வலிக்க தொட்டுப் பார்த்தேன்
குறுக்கு வெட்டு தோற்றத்தில்
வலியை கொஞ்சம் வெட்டிப் பார்த்தேன்
வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி
வலிக்க வலிக்க தொட்டுப் பார்த்தேன்
குறுக்கு வெட்டு தோற்றத்தில்
வலியை கொஞ்சம் வெட்டிப் பார்த்தேன்
இது வேறு உலகம் ஓஹோ
இது பத்தாம் கிரகம் ஓஹோ
இறைவா இங்கே நீயும் வந்தால் மிருகம்
இது வேறு உலகம் ஓஹோ
இது பத்தாம் கிரகம் ஓஹோ
இறைவா இங்கே வந்தால் நீயும் மிருகம்

கற்றதால் பெற்றதோ
பெரும் வாள் அல்லவா
குத்துதே கொத்துதே பல பாம்பல்லவா
எங்கு போயினும் பேய்களே
எலும்பு தின்றிடும் நாய்களே
எட்டு திக்கிலும் பொய்களே
இங்கு அலைகின்றதே
கேட்டதால் பெற்றதோ
பெரும் வலி அல்லவா
கொன்றதால் கண்டதோ
புது வழி அல்லவா
எங்கு நோக்கிலும் அம்மணம்
ஏற்று கொள்ளுமா எம் மனம்
ஆடி தீர்க்குதே சன்னதம்
ரத்தம் கொதிக்கின்றதே

உலகினை தூர் வார வேண்டுமே
உண்மை மட்டும் வாழ வேண்டுமே
கனவுகள் கை கூட வேண்டுமே
கொல்லும் கோபம் கூட வேண்டுமே
எனக்கென புது பூமி வேண்டுமே
தமிழ் தான் அங்கே வேண்டுமே
தமிழனுக்கினி ரோஷம் வேண்டுமே
எச்சில் இதயம் மாற வேண்டுமே
அடடா இது நடக்குமா
என் பூமி எனக்கு கிடைக்குமா
ஓ அது வரை நெஞ்சம் பொறுக்குமா
என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஓ
அகம் புறம் என இரண்டும் இருக்குதே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்
அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில்
எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குலம் ஓ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar