Kishore Kumar Hits

Ravi Bharath - Jebam Seivom şarkı sözleri

Sanatçı: Ravi Bharath

albüm: Aayathamaa Vol. 1-5


சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம்
முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
முடியாது என்று ஒன்றுமில்லை
வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால்
வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை
வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம்

எலியாவும் ஒரு மனிதன்தான்
ஜெபித்திட மழை மறைந்ததே
மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
நின்ற மழை அன்று பொழிந்ததே
விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

வானவரே விண்ணப்பம் செய்யும்போது
மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட
அவர் சித்தப்படி என்றும் நடந்திட
மனத் தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
உயிர் உள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்
சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
ஜெபம் செய்திடுவோம் ஜெபம் செய்திடுவோம்
ஜெபம் செய்திடுவோம் ஜெபம் செய்திடுவோம்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar