ஓ... ஓ... ஓ... ஓ... நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கீடாகுமா நான் பட்டக் கடன் தீர்ப்பேனென்றால் ஓர் ஜென்மம் போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா ஆராரோ... ஆராரிரோ... ஆராரோ... ஆராரிரோ... மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை மெழுகாக உருகி தருவாளே ஒளியை குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை நடமாடும் கோயில் நீதானே நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கீடாகுமா நான் பட்டக் கடன் தீர்ப்பேனென்றால் ஓர் ஜென்மம் போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே