தேடிச்சோறு நிதந் தின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக வுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடி கிழப்பருவமெய்தி - கொடும் கூற்றுக் கிரையென பின்மாயும் - பல வேடிக்கை மனிதரை போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்றுவிட்ட போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரோடு போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே பச்சைஉநே ஐந்து வெ படைகள் வந்த போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே