Kishore Kumar Hits

Preethi - Anbae Anbae şarkı sözleri

Sanatçı: Preethi

albüm: Anba Azhaga (Original Motion Picture Soundtrack)


அன்பே அன்பே
நெஞ்சே நெஞ்சே
உன் பார்வையில் உயிர் வாழ
நான் தவிப்பது புரியாதா
அடி ஒரு முறை விழி வந்து
என் உயிர் வரை தீண்டாதா
மின்னல் போலே கண்கள் உனை தேடி அலைகிறதே
கண்கள் மூடிய பின்பும் உனை காண முடிகிறதே

மின்னல் போலே கண்கள் உனை தேடி அலைகிறதே
கண்கள் மூடிய பின்பும் உனை காண முடிகிறதே
சுற்றும் பூமி சற்றே நின்றுப் போனது
ஒற்றைப் பார்வை உன்னைப் பார்த்து வாடுதே
பட்டம் போலே நானும் வானில் போகிறேன்
உந்தன் கையில் எந்தன் வாழ்க்கை நூலடி
அன்பே-ஓ-அன்பே-ஓ
உன் கோவம் ஆற்றிவிடு பெண்ணே
நெஞ்சே-ஓ-நெஞ்சே-ஓ
உன் நேசம் காட்டிவிடு கண்ணே
என்னில்-ஓ-என்னில்-ஒ-ஓ
உன் காதல் ஊற்றிவிடு கண்ணில்
இன்றே-ஓ-இன்றே-ஒ-ஓ
என் கால்கள் தாவுமடி விண்ணில்

விழியிலே விழியிலே
நீ ஏனோ செய்த சில ஜாலங்கள்
அருகிலே அருகிலே
ஒரு அருவியாய் என் கண் முன் வந்தாய்
இதயமே இதயமே
நீ ஏனோ செய்த சில மாயங்கள்
உயிரிலே உயிரிலே
வரும் காதலை உன் கண்ணில் சொல்வாய்
நீ வந்த பின்னே என் கால்கள்
வானில் ஒரு பாதை தேடும்
உன் வாசம் வீசும் என் சுவாசக்
காற்று இன்று வந்தழையும்
நீ சொல்லும் சொல்லில் என் காதல்
வாழும் உன் நெஞ்சில் பெண்ணே
என் ஜீவன் என்றும் உனைச் சேருமே
நினைத்து நினைத்து தவித்து தவித்து
நெஞ்சில் தடுமாற்றம்
உயிர் நோகும் பெண்ணே
உன் காதலை சொல்லிவிடு
உன் பார்வையில் உயிர் வாழ
நான் தவிப்பது புரியாதா
அடி ஒரு முறை விழி வந்து
என் உயிர் வரை தீண்டாதா
I'm done with you girl
I hate you with that
You ought be so fine
You ain't mine
It ain't very worth that
Than to waste my time
Telling you go go go go away
Telling you stay stay stay stay away
Hear me no no no never babe
Find your way
Ain't your God God God not today
You're not my girl girl girl anyday
Without you fine fine fine in this game
Go away (I really really don't need you girl)

தென்றலாய் தென்றலாய்
நீ தீண்டும் போது சில மாற்றங்கள்
இமைகளின் அசைவிலே
ஒரு கவிதையாய் உன் சம்மதம் சொல்வாய்
தனிமையின் கொடுமை
என் நெஞ்சின் ஓரம் சில காயங்கள்
மனதிலே மனதிலே
ஒரு பறவையாய் நீ பறந்திட வந்தாய்
உனைப் பார்த்த பின்னே என் உள்ளம்
விண்ணில் ஒரு மேடை போடும்
உன் வாசல் தேடும் என் வானம்
என்று உனை சென்றடையும்
நீ சொல்லுப் பெண்ணே என் ஜீவன்
வாழும் உன் நெஞ்சின் ஓரம்
என் பாடல் என்றும் உனைத் தேடுமே
எடுத்து படித்து ரசித்து முடிக்க
கண்ணில் ஒரு ஏக்கம்
அலைபாயும் கண்ணில்
என் நெஞ்சைக் கிள்ளிவிடு
உன் பார்வையில் உயிர் வாழ
நான் தவிப்பது புரியாதா
அடி ஒரு முறை விழி வந்து
என் உயிர் வரை தீண்டாதா
மின்னல் போலே கண்கள் உனை தேடி அலைகிறதே
கண்கள் மூடிய பின்பும் உனை காண முடிகிறதே
சுற்றும் பூமி சற்றே நின்றுப் போனது
ஒற்றைப் பார்வை உன்னைப் பார்த்து வாடுதே
பட்டம் போலே நானும் வானில் போகிறேன்
உந்தன் கையில் எந்தன் வாழ்க்கை நூலடி
அன்பே-ஓ-அன்பே-ஓ
உன் கோவம் ஆற்றிவிடு பெண்ணே
நெஞ்சே-ஓ-நெஞ்சே-ஓ
உன் நேசம் காட்டிவிடு கண்ணே
என்னில்-ஓ-என்னில்-ஒ-ஓ
உன் காதல் ஊற்றிவிடு கண்ணில்
இன்றே-ஓ-இன்றே-ஒ-ஓ
என் கால்கள் தாவுமடி விண்ணில்
விண்ணில்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar