இந்த இரவு தீர்வதற்குள்ளே... இந்த இரவு தீர்வதற்குள்ளே... ஒரு கோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும் ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும் எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும் எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும் உன்னை நான் முத்தமிட உன்னை நான் முத்தமிட தடையுண்டோ பைங்கிளி? தடையுண்டோ பைங்கிளி? உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி? இந்த இரவு தீர்வதற்குள்ளே... ♪ இந்த இரவு தீர்வதற்குள்ளே... மென்காற்று கண்டங்கள் கடந்திருக்கும் வெண்ணிலவு ஒருகீற்று வளர்ந்திருக்கும் கண்ணாடிக் கோப்பைகளும் கன்னிமையும் உடைந்திருக்கும் முன்னிரவில் பலர் செய்த பாவங்கள் மறந்திருக்கும் உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி? உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி? உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி? இந்த இரவு தீர்வதற்குள்ளே... ♪ இந்த இரவு தீர்வதற்குள்ளே... அழகான கவிதை வரி விழுந்திருக்கும் அரசாங்கச் சதியொன்று முடிந்திருக்கும் சிறைவாசக் கைதிக்கு நாளொன்று குறைந்திருக்கும் சேயொன்று கருப்பையில் சிலபொழுது புரண்டிருக்கும் உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி? உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி? உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி? இந்த இரவு தீர்வதற்குள்ளே... இந்த இரவு தீர்வதற்குள்ளே... ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும் ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும் எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும் எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும் உன்னை நான் முத்தமிட உன்னை நான் முத்தமிட தடையுண்டோ பைங்கிளி? தடையுண்டோ பைங்கிளி? உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி?