ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே தூளாகும் சூது திமிராக மோது நீ திருத்திட நினைத்தால் உலகம் திருந்தாது உன்னை துரத்திய கூட்டம் தெறித்திட விளையாடு ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே ♪ நீதியும் நேர்மையும் வாழ்வில் தேவை என்று சாத்திரம் சொன்னது உண்மை இல்லையோ போலியும் பொய்களும் போட்டி போடும் போது பூமியில் நியாயமே வாழ்வதில்லையோ இருட்டில் நாம் நடக்கும் போது நிழலும் இல்லை நீ வாழ உன்னைத் தவிர துணையும் இல்லை இங்கே துன்பம் தான் வாழ்வில் பாதி துவளாமல் முந்தி ஓடு திருத்திட நினைத்தால் உலகம் திருந்தாது ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே ♪ நன்மைகள் தீமைகள் ரெண்டும் உண்மை இல்லை தேவைகள் மட்டுமே நியாயமானதே இன்பமும் துன்பமும் தூரம் ஒன்றும் இல்லை வாழ்க்கையில் ரெண்டுமே பாடமானதே திருப்பங்கள் இல்லாவிட்டால் பாதை இல்லை திரும்பாமல் நீயும் சென்றால் பயணம் இல்லை கொன்றால் அது பாவம் என்பான் தின்றால் அது போகும் என்பான் திருத்திட நினைத்தால் உலகம் திருந்தாது ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே தூளாகும் சூது திமிராக மோது நீ திருத்திட நினைத்தால் உலகம் திருந்தாது உன்னை துரத்திய கூட்டம் தெறித்திட விளையாடு