நினைவுகள் பொன் நினைவுகள் அடுத்த அடுத்த நொடி என்னென்று - அதை அறியத் துடிக்கும் விழியே! முடிந்த முடிந்த நொடி பொன் என்று - அதை நினைவில் பதிக்கும் விழியே! புதியன பூத்திடும்போதெல்லாமே பழையன நீங்கிடும் தன்னாலே இதுவரை வாழ்ந்த உன் வாழ்வெல்லாமே நொடி போலே கண்ணின் முன்னாலே நினைவுகள் பொன் நினைவுகள் விழியிலே உன் விழியிலே நினைவுகள் பொன் நினைவுகள் வழியிலே உன் வழியிலே விடியல் விடியல் எனுங்கோலாலே - தினம் விழியைத் திறக்கும் உலகம் துணிவை அணிந்து அதில் போனாலே - கடும் பனியின் திரையும் விலகும் நினைவுகள் பொன் நினைவுகள் - உன் வழியிலே உன் வழியிலே முதல் முதல் நினைவெது? இறுதியின் நினைவெது? ரெண்டும் என்றும் இல்லை - ஹே ரெண்டும் தேவையில்லை நடுவினில் வருவதும் நிலைப்பதும் மறப்பதும் உந்தன் கையில் இல்லை - ஹே முயல்வதும் தொல்லை நீரோடையில் பிடிக்கிற மீனாக உன் கையிலே ஒன்று கையைவிட்டு நழுவிடும் மீனாக வீணானதோ ஒன்று? முடிந்தும் நீ தொடர்ந்திட ஒரு வழியே பிறரது நினைவுகளாய் நினைவுகள் பொன் நினைவுகள் விழியிலே உன் விழியிலே நிகழும் நிகழும் இந்த நாள் ஒன்றில் - ஒரு நினைவு நினைவு மலரும் நிலவு நிலவு எனத் தேய்ந்தேதான் - சில நினைவு நினைவு உதிரும் புதையலிலே விழும் வைரம் போலே மனதினிலே விழும் ஓர் நினைவு இமை தடுத்தும் விழும் கண்ணீர் போலே வெளியேறும் மறு நினைவு நினைவுகள் பொன் நினைவுகள் விழியிலே உன் விழியிலே நினைவுகள் பொன் நினைவுகள் வழியிலே உன் வழியிலே