எல்லாம் நாடகம் என்றாயோ? பொய்யாய் வாழ்பவன் என்றாயோ? எல்லாம் நாடகம் என்றாயோ? பொய்யாய் வாழ்பவன் என்றாயோ உந்தன் சுகத்தில் அவனின் சிரிப்பும் உந்தன் வலியில் அவனின் துடிப்பும் கண்ணீர் துளியில் உதிர்ந்த உயிரும் எல்லாம் நாடகம் என்றாயோ? பொய்யாய் வாழ்பவன் என்றாயோ? ♪ விழியினிற் நுழைந்திடும் வாளா? கிழியுறும் இருதயத் தாளா? செவியினிற் புகுந்திடும் தேளா? இரைச்சலின் எதிரொலி தானா? இது எதிர்பார்த்தது தானா? இனி உந்தன் நிலை இது தானா? ♪ பயணத்தில் உன் பாதை ஆனான் பாதை மேல் உன் பாதுகை ஆனான் உனக்காய் முட்கள் அணிந்தானே உன்னை ஒரு நாள் படைத்தானே உனக்காக தன் ஆசைகள் அடைத்தானே உன்னைக் காணா கனவெல்லாம் வேண்டாம் என்று முடித்தானே அவனை நடிகன் என்றாயோ? உலகே மேடை என்றாயோ? எல்லாம் நாடகம் என்றாயோ? பொய்யாய் வாழ்பவன் என்றாயோ? எல்லாம் நாடகம் என்றாயோ? பொய்யாய் வாழ்பவன் என்றாயோ? உந்தன் சுகத்தில் அவனின் சிரிப்பும் உந்தன் வலியில் அவனின் துடிப்பும் கண்ணீர் துளியில் உதிர்ந்த உயிரும் எல்லாம் நாடகம் என்றாயோ? பொய்யாய் வாழ்பவன் என்றாயோ? ♪ விழியினிற் நுழைந்திடும் வாளா? கிழியுறும் இருதயத் தாளா? செவியினிற் புகுந்திடும் தேளா? இரைச்சலின் எதிரொலி தானா? இது எதிர்பார்த்தது தானா? இனி உந்தன் நிலை இது தானா?