அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு
அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு
எதிலயும் அவ முகம்
புரண்டு படுக்க முடியல
எதுக்கு நான் சிரிக்கிறேன்
வெளக்கம் கொடுக்க தெரியல
சுட்டி தனத்துல என்ன அவக்குற பூ மூட்ட
அவ நட்சத்திரத்துல தொட்டிலமைச்சேனே தாலாட்ட
அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு
♪
வெயிலுல காயுற
பட்ட மொளகா அவ
அள்ளிவந்து தனியா கடிச்சா
உரப்பு ஏறுமே
கொள்ளவு கூடின
வைகை நதி போலவ
நெஞ்சழக பொழுதும் நெனச்சா
இனிப்பு சேருமே
முன்னையும் பின்னையும்
தொட்டிட தேனா மனசு ஊருமே
புள்ளையும் குட்டியும்
எங்கள போல பொறக்க வேணுமே
மூச்சு குள்ள பூந்து
அவ தொல்லக்கொடுத்தாலும்
ஈச்சங்கட்டில் காத்தா
அதில் சொக்கிடுவேன் நானும்
வெட்டுகிளி அவ
றெக்க விரிச்சாலே வேதாளம்
அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ பச்ச நெருப்புல
பத்தி எரியுர பூக்காடு
பசி கண்டவன் சட்டுன்னு
அள்ளி முழுங்குற சாப்பாடு
பருத்தியா வெடிச்சி நா
இரவும் பகலும் பறக்கிறேன்
வறட்சியா கெடந்தவன்
வரப்ப மறச்சி மொளைக்கிறேன்
ஒட்டி இருந்திட வட்டமடிக்குது வாழ்நாளு
அட கட்ட கடைசியில் கிட்ட வரும் அவ என் ஆளு
அவ கண்ண பாத்தா ம்ம்ம் ஹம்ம்
தனனா னானா னானா னானா
தனா தந்தன தந்தன தந்தன தந்தன னானா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri