Kishore Kumar Hits

ADK Srirascol - Vellai Poove şarkı sözleri

Sanatçı: ADK Srirascol

albüm: Vellai Poove


வெள்ளைப்பூவே...
மெல்ல வாடியதே...
வெள்ளைப்பூவே... என்னை தேடியதே...
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
செம்மண்காட்டில் தனியாக பூத்தவளே
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
என் கண்ணீரால் தண்ணீர் தூவவந்தேனே
தூவிட நான் வந்தேன்
நீ எந்தன் மார்பிலே
அம்பை விட்டு கிழித்திட இடம் விட மாட்டேனே
கண்ணீரால் குளம் செய்து பூவிற்கு தண்ணீர்
ஊற்றுவேனே
தயக்கம் எதும் வேண்டாம்
உன்னை பிரியமாட்டேன் அன்பே
அழகே வா எந்தன் கையைப்பிடி அழகே வா எந்தன் பக்கமடி
நீ என் உயிரே பிரியாதே கணவிற்குள் ஒழியாதே(ஒழியாதே)
உன் கண்ணில் என்ன ஏக்கம்
காதலின் மாய மோகம்
உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று
நிமிர்ந்து சொன்னேன் நானும்
அட பொய்யாகிவிட்டது
பாவம் நான் போட்ட பொல்லாத பாசம்
வேஷம் வழி என்ன காதலின் புது மொழியல்ல(புது மொழியல்ல...)
வா அழகே வெள்ளைப்பூவே
விட்டு போகாதே
காதல் என்ற உணர்வு இறக்கை முளைத்த பறவை போல
இறுக்கமாக பிடிக்க மறந்தேன்
நீ பறந்துவிடுவாய் என்று நினைக்க நினைக்க மறுத்தேன்
உன்னை தொலைத்து உருகி நின்றேன்
வா...
வா...
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
என் பூவே வெள்ளைப்பூவே
வாழ்க்கையை உணர்ந்தேனே
பூவே தனியாக நடந்தேனே
நீ இல்லாமல் நான் என்னை நான் மறந்தேனே
பாரமாக சுமந்தேனே கண்ணீரை
தொலைத்தேனே உன்னை எங்கு நீ சென்றாய்
மறந்தாய் விட்டுப்பறந்தாய்
பூவே தினந்தோறும் ஞாபகம்
கனவிற்குள் என்னை கொல்லுதே
சிக்கி தவிக்கிறேன் தினமும்
முட்டி மோதி விழுகிறேன் தினமும்
ஏங்குகிறேன் பூவே உன்னை
நினைத்து இன்று
இறைவனை வேண்டுகின்றேன்
என் உயிரை எடுத்துச்செல் என்று சென்று
பிறந்தால் கருவறை இறந்தால் கல்லறை
இது என்ன உலகம் கொடூரமான கிரகம்
இன்றுவரை மனிதா நான் சொல்வதை கேள்
இருக்கும் வரை புரியாது தெரியாது
உயிர் பிரியும் வரை உனக்கு நேரம் கிடையாது
தெளிந்திடு மனிதா, மனிதா
தெளிவில்லை நாடுடா, விளக்கம் இல்லை பாருடா
பதிலுக்கு சொல்ல காதலா, இறைவா... ஏன் பிறந்தேன், விழுந்தேன்
சுமை சுமந்தேன் தவித்தேன், துளைத்தேன்
நரகத்தை கடந்தேன் ஏன்? உன்னை நினைத்து ஏங்குகிறேன்
என்னை நான் வெறுத்தேன்
காதல் என்ற உணர்வு இறக்கை முளைத்த பறவை போல
இறுக்கமாக பிடிக்க மறந்தேன்
நீ பறந்துவிடுவாய் என்று நினைக்க நினைக்க மறுத்தேன்
உன்னை தொலைத்து உருகி நின்றேன்
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
செம்மண்காட்டில் தனியாக பூத்தவளே
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
என் கண்ணீரால் தண்ணீர் தூவவந்தேனே
வெள்ளைப்பூவே...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar