கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள் சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள் பேசாமல் மௌனத்தினாலே மனதைச் சொல்லிடுவாள் இவள் சொந்தம் போதும் என்ற எண்ணம் தந்திடுவாள் கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே ♪ உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள் உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள் உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள் உறங்கும் போதும் உறங்காமல் என் அருகே நின்றிடுவாள் இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை மறு ஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும் கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே ♪ கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன் கண்ணீர்த் துடைக்க இவளும் அந்த நிலவும் அழகென்றேன் என்னை நானே காண்பது போலே அவளைப் பார்க்கின்றேன் என்றும் எங்கும் வழித் துணையாக இவளைக் கேட்கின்றேன் உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கே கண்டேன் இவள் அன்பின் வெளிச்சம் கொண்டு இரவும் பகல் தான் என்பேன் என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும் கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள் சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள் பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள் இவள் சொந்தம் போதும் என்ற எண்ணம் தந்திடுவாள் கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே