என் காதலா விதி என்ற ஒன்று இருந்தால் விதிவிலக்கும் உண்டு காலத்துக்கே விதிவிலக்கு உண்டு என்றால் காதலுக்கு இருக்காதா இது ஒரு விதிவிலக்கான காதல் வயசு வித்தியாசம் மறந்து மனசு பார்க்கும் காதல் ♪ என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா ♪ என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா வயதால் நம் வாழ்வு முறியுமா வாய் முத்தம் வயது அறியுமா நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா என்வாழ்வில் தந்தை இல்லையே தந்தைபோல் கணவன் வேண்டுமே... ஆஅ... என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா ♪ ஆணும் பெண்ணும் சேர்வது ஆசைப் போக்கில் நேர்வது காதல் நீதி என்பது காலம்தோறும் மாறுது வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது ஆழி ரொம்ப மூத்தது ஆறு ரொம்ப இளையது ஆறு சென்று சேரும்போது யாரு கேள்வி கேட்பது... ஆஅ... என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா ♪ காதல் சிந்தும் மழையிலே காலம் தேசம் அழியுதே எங்கே சிந்தை அழியுதோ காதலங்கே மலருதே அறிவழிந்து போனபின் வயது வந்து தோன்றுமா பொருளழிந்து போனபின் நிழல் கிடந்து வாழுமா அறிவழிந்து போனபின் வயது வந்து தோன்றுமா பொருளழிந்து போனபின் நிழல் கிடந்து வாழுமா அறமிருக்கும் வாழ்விலே முரணிருக்கும் என்பதால் முரணிருக்கும் வாழ்விலும் அறமிருக்கும் இல்லையா... ஆஅ... என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா வயதால் நம் வாழ்வு முறியுமா வாய் முத்தம் வயது அறியுமா நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா என்வாழ்வில் தந்தை இல்லையே தந்தைபோல் கணவன் வேண்டுமே... ஆஅ...