திரையோடு தூரிகை பிறையோடு தாரகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான் தலையோடு பாதிகை இருளோடு தீபிகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான் தீ இன்றியே உண்டாகும் சூடென தீண்டாமலே ஒரு முத்தம் இது காலமே நீ உறைந்தே இனி போவாயோ (ராதே ஷ்யாம்) காலமே நீ கரைந்தே பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்) திரையோடு தூரிகை பிறையோடு தாரகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான் ♪ மலை முகடும் முகில் உதடும் நாளெல்லாம் கூடும் போது கரை முதலும் அலை இதழும் வாழ்வெல்லாம் கூடும் போது கிளை இலை மேலே மழையெனவோ மழலையின் நாவில் முலையெனவோ கிளியதன் மூக்கில் கனியெனவோ சிலை உடல் மூடும் பனியெனவோ எது போல நான் இதழ் கூடிட கேள்வியோடு நான், காதலோடு நீ பூமியே கொண்டாடுதே காலமே நீ உறைந்தே இனி போவாயோ (ராதே ஷ்யாம்) காலமே நீ கரைந்தே பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்) ♪ பாதத்தை நதியென தொடுவேன் காலோடு கயலென படுவேன் தொடை மீது தூறலாகி இடை மீது ஈரமாகி மலர்கள் மயங்கும் மார்போடு உலருமாடையாய் ஆவேன் தழுவ தயங்கும் தோளோடு நிலவின் பாலென வீழ்வேன் கரம் கோர்த்து பொன்முகம் பார்த்து நான் பாட கருங்கூந்தல் காற்றினில் ஆட வானமே கொண்டாடுதே காலமே நீ உறைந்தே இனி போவாயோ (ராதே ஷ்யாம்) காலமே நீ கரைந்தே பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்) திரையோடு தூரிகை பிறையோடு தாரகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான் (உன்னோடு நான்) தலையோடு பாதிகை (பாதிகை) இருளோடு தீபிகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான் (உன்னோடு நான்)