Kishore Kumar Hits

Jakes Bejoy - Tharum Anbaale - From "Por Thozhil" şarkı sözleri

Sanatçı: Jakes Bejoy

albüm: Tharum Anbaale (From "Por Thozhil")


தரும் அன்பாலே
மனம் பூவாய் மாறுமே
பெறும் அன்பாலே
அது காடாய் ஆகுமே
விதை நன்றானால்
கன்றாகும்
அது தீங்கானால்
விஷமாகும்
வாழும் எல்லாமே
எல்லாமே
அன்பின் முன்னே
சரணடைந்திடுமே
மழை மண் வீழ்ந்தே
பல பூக்கள் பூக்குமே
அது பொய்த்தாலும்
உயிர் ஈரம் காக்குமே

ஓடும் தண்ணீரின் உள்ளே
வாழும் கூழங்கல்லை போலே
வாழ்க்கை
இந்த வாழ்க்கை
ஒரு முறை அது
அலை சுழலுடன் ஓடும்
ஒரு முறை அது கரை
ஒதுங்கிட கூடும்
மாற்றங்களை கண்டுகொண்டால்
அது வாழும்
அதுவே அதுவே பாடும்
ஒரு கரம் நீண்டே
உனை அன்பாய் தீண்டுமே
அதை நீ உணர்ந்தால்
அட எல்லாம் மாறுமே
விதை நன்றானால்
கன்றாகும்
அது தீங்கானால்
விஷமாகும்
வாழும் எல்லாமே
எல்லாமே
அன்பின் முன்னே
சரணடைந்திடுமே
விதை சரியானால்
செடி அழகாய் பூக்குமே
அது பிழையானால்
வெளி உதவி தோன்றுமே
ஒரு கரம் நீண்டே
உனை அன்பாய் தீண்டுமே
அதை நீ உணர்ந்தால்
அட எல்லாம் மாறுமே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar