Kishore Kumar Hits

Thaikkudam Bridge - Saalaikal - Namah şarkı sözleri

Sanatçı: Thaikkudam Bridge

albüm: Namah


எனக்காக நீளும் இந்த சாலைகள்
எனக்கென்று விடியும் இந்த காலைகள்
புதுமழையின் ஊடே சில வாசங்கள்
அவை தானே எந்தன் புது தேடல்
இருக்கரம் கொண்டு பறந்தாலுமே
இப்புவியில் நானும் ஒரு துளிதானே
உயரங்கள் நோக்கி தினம் எழுவேனே
இவை தானே எந்தன் ஒரு தேடல்
ஒரு விதையாய் இந்த அன்பை
மனதுக்குள் நாம் சேர்த்தாலே
விருச்சங்கள் அது கிளை விட்டுப்பிறியும்
இந்த வாழ்க்கை ஒருமுறைதான்
அதை வாழும் வரம் பேரின்பம்
இவ்வன்பு ஒரு தவம்தான்
இதை உந்தன் வாழ்வில்
நடத்திடு இன்றே

அர்த்தங்கள் இழந்த சொற்கள் போலே
இலக்கில்லா ஒரு வாழ்க்கை எதற்கு
உன் வாழ்க்கை சிதறி தவறி சென்றால்
சரி சரி விடு அன்பென்றும் இருக்கு
சிதறி பின்னாலே முன்னோக்கி பாயும்
அம்பு தன் இலக்கை போய் சேரும்
அதுபோலே மனதில் அன்பு கொண்டிரு
சக உயிர்களும் உன்னோடு சேரு
உன்னாலே உருவாகும் உனக்கான ஒரு மாற்றம்
அதுபோதும் அதுதானே உன் தொடக்கம்
கனவொன்று இருந்தால் தடுமாற்றங்கள் இல்லை
அன்பென்ற ஒன்றே எல்லை
மின்னல்கள் உன்னோடு
சேர்ந்தேதான் அட விடியட்டும்
அதன் பொருளை நீ உன்னோடு உணரு
சுயநலமின்றி வரும் அன்பு
அது தானே பெரும் நம்பிக்கை
பெருங்கடல்போலே முடிவில் நீ ஆழங்காணு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar