Kishore Kumar Hits

T. Rajendar - Uravenum şarkı sözleri

Sanatçı: T. Rajendar

albüm: Oruthalai Raagam - Raagam Thedum Pallavi - Nenjatthai Killaathe


ப-ப-ப-பா
ப-ப-ப-பா-பா
ப-ப-ப-பா
ப-ப-ப-பா-பா
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும் ப-ப-பப்-பா
நினைவிலும் ப-ப-பப்-பா
ஒரு சுகம் ப-ப-பப்-பா
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

பார்வை ஒவ்வொன்றும் கூறும்
பொன் காவியம்
பாவை எங்கின்ற கோலம்
பெண் ஓவியம்
மாலை வரும் போதிலே
நாளும் உந்தன் தோளிலே
கனவில் ஆடும்
நினைவு யாவும்
கனவில் ஆடும்
நினைவு யாவும்
இனிய பாவம்
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

நெஞ்சின் உள்ளூர ஓடும்
என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும்
உன் பூஜைகள்
எந்தன் மனம் எங்கிலும்
இன்பம் அது சங்கமம்
இணைந்த கோலம்
இனிய கோலம்
இணைந்த கோலம்
இனிய கோலம்
இளமைக் காலம்
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும் ப-ப-பப்-பா
நினைவிலும் ப-ப-பப்-பா
ஒரு சுகம் ப-ப-பப்-பா
ப-ப-ப-பா
ப-ப-ப-பா-பா
பா-பா-ப-பா
பா-ப-ப-பா-பா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar