Kishore Kumar Hits

Ranjani - Pongiyathe Kathal Vellam şarkı sözleri

Sanatçı: Ranjani

albüm: Mannukul Vairam


ஆண்: ஆ.ஆ.ஆ.ஆ.
பெண்குழு: ஆ.அஆஆ.
திரைப்படம்: மண்ணுக்குள் வைரம்
ஆண்: பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது அனுபவம் இனியது புதியது
ஆண்: பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
ஆண்: பள்ளிப்பாடம் வாசித்தால்
(இசை)
பள்ளிப்பாடம் வாசித்தால் நீதானே கண்ணில் வந்தாய்
பொன்மேகம் விண்ணோடு எந்நாளும்
என்னுள்ளம் உன்னோடு உன்னோடு உன்னோடு உன்னோடு
பெண்: எந்த சொந்தம் யாரோடு யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும் கன்னிப்பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும் பண்பாடு என்னோடு என்னோடு என்னோடு என்னோடு
ஆண்: கடல் கூட குளமாகும்
என் காதல் மாறாது
பெண்: பொங்கியதே காதல் வெள்ளம்
ஆண்: ஆ.ஹா.துள்ளியதே ஆசை உள்ளம்
பெண்குழு: ஆ.ஆ. ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.
பெண்: ஏழை முல்லை பெண் பிள்ளை
(இசை)
ஏழை முல்லை பெண் பிள்ளை சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது என்றாலும் இப்போது
சொல்லாது சொல்லாது சொல்லாது சொல்லாது
ஆண்: கண்ணால் பாரு பெண் பூவே வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப்பற்றி கவி பாட ஊமைக்கு ஞானம் இல்லை
நீரின்றி மீனில்லை அம்மாடி நீயின்றி நானில்லை நானில்லை நானில்லை நானில்லை
பெண்: உனக்காக என் பெண்மை தவம் செய்தால் தப்பில்லை
ஆண்: பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பெண்: கண்ணில் நிலா முகம் உலவியது எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது அனுபவம் இனியது புதியது
பெண்: பொங்கியதே காதல் வெள்ளம் ஆண்: ம்...
பெண்: துள்ளியதே ஆசை உள்ளம்
அன்பு கிருஷ்ணா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar