Kishore Kumar Hits

Vaali - Un Paarvai (From "Chennai-600028") şarkı sözleri

Sanatçı: Vaali

albüm: Super Hits of Vaali, Vol. 2


உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்

இரவெல்லாம் நெஞ்சில்
சின்ன சின்ன அவஸ்த்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை
செல்லரிக்க விடுபவள் நீதானே
உயிர் நாளும் கொஞ்சம்
விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நல் இரவு ஒவ்வொன்றையும்
முள் இரவு என்று செய்தாயே
நுரை ஈரல் தேடும் சுவாசமே
விழி ஓரம் ஆடும் சொப்பனமே
படி ஏறி வந்தால் சௌக்கியமே
ஹே-ஏ-ஹே.அன்பே
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்

சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை
சன்சீனாவும் கண்டதில்லை
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்
மழை நாளில் நீதான் வெப்பமே
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே
உளி ஏதும் தீண்டா சிற்பமே
ஹே-ஏ-ஹே.அன்பே
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எது கேட்கிறாய் சொல்
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எது கேட்கிறாய் சொல்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar