Kishore Kumar Hits

Vaali - Mayilirake Mayilirake (From "Thenkasi Pattanam") şarkı sözleri

Sanatçı: Vaali

albüm: Hits of Vaali


மயிலிறகே மயிலிறகே
மணிகிளியே மணிகிளியே
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
ஹே மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்
ஊராரும் வேறாரும் காணாமலே
கண்ணா உன் உள்ளத்தை படம் பிடித்தேன்
மயிலிறகே மணிகிளியே
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
மன்றாடும் பிள்ளை இது
கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
கண் மூடும் பிள்ளை இது
எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்
எதுவும் உன் காட்சி தான்
அழகே நீயும் என் மனதில் பாய்கிற
ஆசை நீர் வீழ்ச்சி தான்
நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன்
நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன்
நான் சொன்னால் கூட நான் கேட்க மாட்டேன்
நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன்
ஒ மானே மானே மனதுக்குள்ளே
உனையின்றி இனிமேலே ஞாபகமில்லை
மயிலிறகே மணிகிளியே
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

பழி வாங்கி போனது பல ராத்திரி
உன்னால் நான் தூக்கம் கெட்டேன்
பனி வாடை காற்றோடு விவரம் சொல்லி
உனக்காக தூது விட்டேன்
தூது வந்தது தகவல் தந்தது
தனிமை பொல்லாதது
உன் போல் என் மனம் உருகும் சங்கடம்
வெளியில் சொல்லாதது
எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
அவரோடு அவன் இங்கு அவனே சேர்த்தான்
உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனியில்லையே
என் அன்பே அன்பே காதோடு சொல்
கல்யாண பூமாலை நீ தரும் நேரம்
மயிலிறகே மயிலிறகே
மயிலிறகே மயிலிறகே
மணிகிளியே மணிகிளியே
மணிகிளியே மணிகிளியே
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
மயிலிறகே மயிலிறகே
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar